சார்பட்டா பரம்பரையை தட்டி தூக்கிய பிரபல சேனல்.. இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக எப்போது வெளிவருகிறது தெரியுமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியானது முதல் இன்றுவரை தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்படம் குறித்த பேச்சுதான் நிலவி வருகிறது.

அந்த அளவிற்கு படம் தாறுமாறாக உள்ளது என ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் கூறி வருகின்றனர். படம் மட்டுமின்றி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆர்யாவின் மனைவி மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை துஷாரா விஜயன் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழ் திரை பிரபலங்கள் முதல் ஹிந்தி பிரபலங்கள் வரை அனைவரும் சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சார்பட்டா திரைப்படத்தை எந்த தொலைக்காட்சி நிறுவனம் வாங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தொலைக்காட்சியான கலைஞர் டிவி சார்பட்டா திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றப் போவதாக தெரியவந்துள்ளது.

arya-sarpetta
arya-sarpetta

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்த நிலையில் தற்போது கலைஞர் டிவி இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்த படம் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்