5 வருடத்துக்கு முன்பே ரிலீசான படம் தான் சார்பட்டா- ஆர்யா ரோலில் நடித்த ஹீரோ யார் தெரியுமா

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படமே சார்பட்டா பரம்பரை. பீரியட் பிலிம் ஆக எடுத்துள்ளார் இயக்குனர். 70 களில் வாழ்ந்த பாக்ஸிங் வீரர் பற்றிய கதை என படம் ஆரம்பிக்கும் போதே தகவல்கள் வெளியானது. ஆர்யா சமீபத்தில் உடல் எடையை முரட்டுத்தனமாக கூட்டி வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான உடலுடன் மிரட்டும் பாக்ஸிங் வீரர் போஸ்டர் வெளியாகி சமீபத்தில் வைரலானது.

வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது. சார்பேட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபு பாய் பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை என பல குத்துச் சண்டையைக் கற்றுக்கொடுத்த பயிற்சி மையங்கள் உண்டு. ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை என்பார்கள்.

arya pasupathi in sarpetta

இந்த படத்தில் ஆர்யா கபிலன் என்ற ரோலில் சார்பேட்டா பரம்பரை சேர்ந்தவராக நடித்துள்ளார். இடியப்ப நாயக்கர் பரம்பரை உடன் உள்ள இவரது பகை, போட்டி, அரசியல் என பல விஷயங்களை இப்படத்தில் பார்க்க முடியும். பழைய மெட்ராஸின் பரிணாமம் இப்படம் வந்த பின் நமக்கு புரியும்.

எனினும் இந்த கலாச்சாரத்தை காமிக்கும் முதல் படம் இது இல்லை. கடந்த 2015 இல் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி, திரிஷா நடிப்பில் வெளியான “பூலோகம்” படம் இதே ஜானர் தான். எஸ் பி ஜனநாதன் அசிஸ்டன்ட் கல்யாண கிருஷ்ணன் இயக்கிய படம்.

boologam

இரும்பு மனிதர் ராசமாணிக்கம் மற்றும் நாட்டு மருந்து வைத்தியர் என்ற இரண்டு பரம்பரை பற்றி அதிகம் கமித்திருப்பார் இயக்குனர். இப்படத்தில் கம்யூனிசம் மற்றும் பல அரசியல் நிகழ்வுகளை பார்க்க முடியும். அந்த நேரத்தில் கலவையான விமர்சனம் பெற்ற படம் பூலோகம்.

ஃபுட்பால், கபடி, கில்லி இதனை விட ஒருகாலகட்டத்தில் பாக்சிங் பிரபலமாக இருந்த ஊர் நம் நார்த் மெட்ராஸ். ரஞ்சித்தை தொடர்ந்தும் பலர் இதே பாக்சிங் பகையை வைத்து படம் எடுக்க நிறைய வாய்ப்புள்ளது.