லைக்ஸ் அள்ளுது ஆர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சார்பட்டா புதிய போஸ்டர்!

இயக்குனர் பா ரஞ்சித்தின் படங்கள் எந்தவித அரசியலை பேசும் என்பது நாம் அறிந்த விஷயமே. எனினும் கமெர்ஷியல் மசாலாவை சேர்த்து அனைவருக்கும் நோக்கம் புரியும் விதம் தந்து சினிமா வாயிலாக கருத்துக்களை பதிவிடுகிறார்.

இம்முறை சார்பட்டா பரம்பரை பீரியட் பிலிம் ஆக எடுத்துள்ளார் இயக்குனர். வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் பற்றிய படம். 70 களில் வாழ்ந்த பாக்ஸிங் வீரர் பற்றிய கதை. ஆர்யா உடல் எடையை முரட்டுத்தனமாக கூட்டி, வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான உடலுடன் “கபிலன்” என்ற ரோலில் நடிக்கிறார்.

ஆர்யா பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளார். ஏனென்றால் பா ரஞ்சித் இயக்கிய அனைத்து படங்களும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததை விட விமர்சன ரீதியாக வெற்றியடைந்துள்ளன என்பதே காரணம்.

சமீபத்தில் ஆர்யா தந்து பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு படக்குழு, புதிய போஸ்டரை வெளியிட்டனர்.

sarpetta arya

இந்த போஸ்டர் லைக்ஸ் குவித்தது.