சார்பட்டா படத்தில் புகழ் கிடைக்க தல அஜித் தான் காரணம்.. மனமுருகும் வில்லன் நடிகர்

ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி திரும்பிய பக்கமெல்லாம் நல்ல நல்ல விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

70களில் வந்த பாக்ஸின் கலைஞர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதிலும் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்திற்கு தனி ஒரு படமே வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கைன் என்பவருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. நீண்ட காலமாக சினிமாவில் வில்லன் நடிகராக தடம் பதிக்க காத்திருந்தவருக்கு பா ரஞ்சித் மூலம் ஒரு விடிவு காலம் கிடைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சார்பட்டா படத்தில் கிடைத்த ஒவ்வொரு பாராட்டுக்கும் புகழுக்கும் காரணம் முழுக்க முழுக்க தல அஜித் தான் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் தன்னுடைய ட்விட்டரில், நன்றி சார், என்னை நானே நம்புவதற்கு நீங்கள் தான் காரணம். வீரம் படத்தில் உங்களுடன் பணியாற்றிய, கலந்துரையாடிய ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய வாழ்நாளில் மிக முக்கியமான ஒன்று. இன்று வேம்புலி கதாபாத்திரத்திற்கு கிடைத்த பெயர், புகழ் என அனைத்தும் உங்களுக்குத்தான் எனக் கூறியுள்ளார்.

தல அஜித் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாரே என தல ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுவிட்டார் ஜான். வேம்புலி கதாபாத்திரத்திற்கு பிறகு அடுத்தடுத்த அவருக்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

vembuli-john-cinemapettai
vembuli-john-cinemapettai