Connect with us
Cinemapettai

Cinemapettai

Sarpatta-Cinemapettai-3.jpg

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ள போகும் சார்பட்டா பரம்பரை பட நடிகர்.. ரணகளமா இருக்குமே.!

ஹிந்தியில் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. மேலும் சேனலின் டிஆர்பியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்துள்ளது. இந்த நான்கு சீசன்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு போட்டியாளர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் முக்கியம். அந்த வகையில் விஜய் டிவி சரியான நபரையே தேர்வு செய்துள்ளது. ஆம் கடந்த நான்கு சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் போட்டியாளர்களை கையாளும் விதமும், கண்டிக்கும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஓவியா தொடங்கி தற்போது நடிகர் ஆரி வரை அனைவரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர். இவர்கள் தவிர நடிகை வனிதா விஜயகுமார் இந்நிகழ்ச்சி மூலமே பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு சீசன்களிலும் சண்டை, அடிதடி, கிசுகிசு, காதல் போன்றவற்றிற்கு பஞ்சமே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஒரு என்டர்டைன்மென்டாக இந்நிகழ்ச்சி இருந்து வந்தது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் எப்போது தொடங்க உள்ளது மற்றும் போட்டியாளர்கள் யார் என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

john-vijay-cinemapettai

john-vijay-cinemapettai

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சீசன் 5-க்காக பிக் பாஸ் வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் நடிகர் ஜான் விஜய் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top