sarkar

சர்கார் படத்தின் மிக பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் கேரளாவில் ப்ரீ புக்கிங் மூலம் 3 கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கூறியது போல் 3500 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் தளபதி விஜய் காண ரசிகர்கள் அதிகம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

வருமானம் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் UAE சென்சார் போர்டில் உள்ள ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார், அதில் அவர் கூறுகையில் விஜய்யின் first entry மிக அற்புதமாக இருப்பதாகவும்.பஞ்ச் டயலாக் நல்ல வரவேற்ப்பை பெறும் என்றும், I am a corporate criminal வசனம் மெர்சல் ஆக இருக்கிறது. சண்டை காட்சிகள் மிக அற்புதமாக எடுத்திருப்பதாகவும்.

vijay-sarkar

 

படம் மசாலா காட்சிகளைக் கொண்ட அமைக்கப்பட்டதாக இருந்தாலும் பல அரசியல் கட்சிகளை மையமாகக் கொண்டு வசனங்கள் அமைக்கப்பட்டது பிரமிக்கத் தக்கதாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இது கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படம் வெளியிடுவதற்கு முன்னதாகவே பிரீ புக்கிங் மூலம் வருமானம் உள்ள முதல் தமிழ் திரைப்படம்.

Rating – 90/100.