Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுட சுட சர்கார் செய்திகள் இதோ அடுத்த அறிவிப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு, மேலும் இந்த திரைப்படத்தை சன் பிச்சர் நிறுவனம் தயாரித்துள்ளது.

sarkar
படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் படத்தில் வரலட்சுமி சரத்குமார் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், sarkar படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், விஜய் படம் என்றாலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும் இந்த நிலையில் படத்தில் அரசியல் கதை என்று கூறுகிறார்கள் ரசிகர்களிடம் சொல்லவா வேண்டும்.
தற்போது தெலுங்கு ரசிகர்களுக்கு சர்கார் படத்தில் இருந்து ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் தொடங்கியுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் சர்க்காரின் தெலுங்கு பாடல்களை ஏ ஆர் ரகுமான் ரீ ரெக்கார்டிங் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளார் சந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமாலி ஆகியோர் சர்காருக்கான தெலுங்கு பாடல்களை எழுதியுள்ளனர்.
மிக வேகமாக நடைபெற்று வரும் படத்தின் வேலைகள் விரைவில் முடிய இருக்கிறது அதனால் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
