Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் டீசர்.! ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.!

விஜய்யின் சர்கார் டீசர்.!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வருகின்ற தீபாவளிக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் சர்கார், இந்த திரைப்படத்தின் first look,பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் படத்தின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.
விஜய் ரசிகர்கள் அடுத்ததாக சர்கார் படத்திலிருந்து டீசர் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களும் உச்ச கட்ட பரபரப்பில் இருக்கிறார்கள், சர்கார் திரைப்படம் அரசியல் கதையமைப்பில் உருவாக்கியுள்ளது என கூறினார்கள், அதனால் படம் எப்படி இருக்கும் டீசர் எப்படியிருக்கும் என காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
சர்கார் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு சர்க்கார் டீசரை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள், இந்த டீசர் 1 நிமிடம் 33 வினாடிகள் ஓடும் எனவும் மேலும் சர்க்கார் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்கார் டீசர் வெளியாவதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை விவரமாக பார்க்கலாம்.
சர்கார் டீசரின் மேல் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால் பிரபல திரையரங்கமான ராம் சினிமாஸ், ரோஹினி, ராக்கி சினிமாஸ், ஆனந்த் சினிமாஸ் ஆகிய திரையரங்கங்கள் சர்கார் டீசரை ஒளிபரப்பு செய்ய முடிவு செய்திருந்தார்கள்.
மேலும் தமிழ்நாட்டு ரசிகர்களைவிட கேரள ரசிகர்கள் சர்கர் டீசருக்காக ஒரு பிரம்மாண்டத்தை செய்துள்ளார்கள், சர்கர் டீசரை மிகப் பெரிய ஸ்கிரீனில் கோழிக்கோடு பகுதியில் பீச்சில் திரையிடப் போவதாக அறிவித்து இருந்தார்கள் இந்த நிலையில் தற்போது சர்க்கார் டீசர் மிக பிரமாண்டமாக வெளியாகியுள்ளது, இதோ டீசர்.
