Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் டீசர் பற்றிய அறிவிப்பை மேடையிலேயே அறிவித்த முருகதாஸ்.!
Published on
விஜய் நடித்து முடித்துள்ள சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது இதில் பல நட்சத்திரங்கள் பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடினார்கள்.அதேபோல் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார் அப்பொழுது ரசிகர்கள் படத்தின் டீசர்..டீசர்..டீசர் எனக் கத்த ஆரம்பித்தார்கள், டீசர் பற்றிய அறிவிப்பை முருகதாஸ் மேடையிலேயே அறிவித்தார்.
அவர் கூறியதாவது படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முழுமூச்சாக வேலை செய்து வருகிறோம் என்றும் , பல இடங்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் டீசர் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என மேடையில் அறிவித்தார் இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் சந்தோஷமாக கத்தினார்கள்.
