Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் டீசர் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கீர்த்தி சுரேஷ்.! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
தளபதி விஜய் முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தை வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
மேலும் படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் நடிகை வரலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளார்.
சமீபத்தில் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இதற்கு விஜய் ரசிகர்கள் கட்அவுட் பேனர்கள் என ஒரு தனியார் கல்லூரியை சுற்றி வைத்து அசத்தி விட்டார்கள், இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் தனது பேச்சுத் திறமையால்.
விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தில் இருந்து அடுத்ததாக காத்துக் கொண்டிருப்பது டீசருக்காக தான், டீசர் எப்போது வரப்போகிறது என்று சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டரில் சர்கார் படத்தின் டீசர் எப்போது வரப்போகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இதோ அதன் பதிவு.
#SarkarTeaserOn19th
So Triple Dhamaka for meee! ?@actorvijay @ARMurugadoss @arrahman @sunpictures @varusarath @Jagadishbliss pic.twitter.com/fhA8NW8f0u— Keerthy Suresh (@KeerthyOfficial) October 10, 2018
