Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா படத்தில் இணைந்த சர்கார் பிரபலம்.! கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கும் சூர்யா ரசிகர்கள்.!
Published on
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார்,இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது, மேலும் சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை ஆனால் படப்பிடிப்பில் மிக பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா, இந்த இரண்டு படங்களும் முடிவடைந்துவிட்டால் அடுத்ததாக இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கோங்ரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் தற்போது சூர்யா படத்தில் மெர்சல் பிரபலம் இணைந்துள்ளார் மெர்சல் சர்கார் படத்தின் பாடலாசிரியர் விவேக் சூர்யாவுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
