Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் சர்கார் படத்தில் சிம்டாக்காரன் பாடலை பாடியவர் யார் தெரியுமா இதோ புகைப்படம்.!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தநிலையில் பிரமாண்டமாக தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வெளியிட்டது.

bamba bhagya
பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் சாதனை படைத்தது மேலும் இந்த சிங்கிள் டிராக் பல ரசிகர்களை கவர்ந்தாலும் சில ரசிகர்கள் பாடல் வரி என்ன என்பது புரியவில்லை என்ற கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் சிம்டாக்காரன் என்ற பாடலை யார் பாடினார்கள் என்ற தற்போது தகவல் வெளியாகி உள்ளது இந்த பாடலை பாம்பே பாகியா என்பவர் தான் பாடியுள்ளார், இவர் இதற்கு முன் ராவணன் படத்தில் கேடாகறி என்ற பாடலையும் இவர்தான் பாடியுள்ளார், மேலும் ரஜினியின் டூ பாயிண்ட் ஜீரோ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இவர் தனக்கு வாய்ப்புக் கொடுத்த ஏ ஆர் ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் சர்கார் படத்தில் அனைத்து பாடல்களையும் விவேக் தான் எழுதியுள்ளார், பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
