Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலின் டைட்டில் இதுதான்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.
நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருவது சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் படத்தை பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில் நாளை படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம், மேலும் அது என்ன பாடல் என்பதை தற்பொழுது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
#Thalapathy ? #Simtaangaran pic.twitter.com/S6BvHxPq9L
— Hariharan Gajendran (@hariharannaidu) September 23, 2018
