Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாவ் செம்ம நடிப்பு தலைவா.! இணையதளத்தில் வைரலாகும் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து தற்பொழுது முருகதாஸ் படமான சர்கார் படத்தில் நடித்து வருகிறார் இவர்கள் கூட்டணி இதற்க்கு முன் கத்தி துப்பாக்கி என இரண்டு பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார்கள், அதனால் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக்கொண்டே போகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், படத்தில் அரசியல்வாதியாக நடிகர் ராதாரவி நடித்து வருகிறார், சில நாட்களுக்கு முன் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியான பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று சாதனையும் படைத்தது.
இந்த நிலையில் மேலும் ஒரு ஷூட்டிங் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது இதில் விஜய் தீபிடித்த பேருந்தில் இருந்து காயங்களுடன் தட்டு தடுமாறி வெளியே வருகிறார் இந்த காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.
