மனிதர்களுக்கு ஒரே மாதிரியான சிந்தனையும் செயல்பாடுகளும் இருப்பது இயற்கை தான். கதையின் மையக்கருத்தை மற்றவர் சிந்தனையோடு ஒப்பிடும்போது இதுபோன்ற தவறுகள் நிகழ்வது இயல்பு தான். சர்கார் கதை பிரச்சனையை இப்போதுதான் முடிவடைந்தது, இதில் கே.பாக்யராஜ் அவர்கள் தலைவராக இருந்து சமரசமாக பிரச்சனையை முடித்து வைத்தார்.

Samuthirakani

 

சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தின் முழு கதை வெளியிட்ட காரணத்தினால் வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளனர். நேற்று கே.பாக்யராஜ் அளித்த பேட்டியில் நான் முழு கதையை சொல்வதற்கான சூழ்நிலையை தள்ளப்பட்டதாகவும் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதனையடுத்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கூறுவது என்னவென்றால் மனிதர்களுக்கு இயற்கையாகவே ஒரே சிந்தனை வருவது இயல்புதான். ஆகையால் இதனை பெரிதுபடுத்தி பேச வேண்டாம் என்றும் சிவகார்த்திகேயன் மட்டும் சூரி நடித்த ‘ரஜினி முருகன்’ படம் 50% என்னுடையது தான் என்று கூறினார். சர்கார் அடுத்த படியாக இந்த பதிவு பரவலாக பேசப்பட்டு வருகிறது.