Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா.? அதுவும் இந்த பிரபலத்தின் பெயரா.?
நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 19 தேதி உலகத்தில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களும் செம்ம கொண்டாட்டமான செய்தி, நாளை விஜய் நடித்து முடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது, இது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி.
இப்படி ரசிகர்கள் பரபரப்பாக காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பலர் சர்கார் படத்தின் டீசர் இணையதளத்தில் லீக் ஆகி விட்டது என ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள், இந்த நிலையில் டீசர் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இணையதளத்தில் சர்கார் டீசர் லீக் ஆகிடுச்சா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது உங்களுக்காக சர்கார் படத்தில் இருந்து ஒரு முக்கிய செய்தி இதோ.
சமீபத்தில் சர்கார் படத்தை பற்றி ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் என்பது எல்லாருக்குமே தெரியும், சர்கார் படத்துல CEO இன் ஹவுஸ் என்ற பாடல் இருக்கிறது, இதுதான் ஓப்பனிங் சாங்ஸ் என பலர் தெரிவித்தார்கள், இந்த நிலையில் முருகதாஸ் சர்கார் படத்தில் விஜய்யின் பெயர் என்ன என்பதே அறிவித்துள்ளார் சர்கார் படத்தில் விஜயின் பெயர் சுந்தர் என கூறியுள்ளார், சுந்தர் என சொன்னவுடனே நமக்கு நினைவுக்கு வருவது கூகுள் சுந்தர் தான், எப்படி கார்பரேட் முதலாளி அரசியல்வாதிகளும் சண்டை போடுகிறார், எதற்க்காக சண்டை போடுகிறார் என்பதுதான் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எது எப்படியோ டீசர் வந்தவுடன் ஓரளவு கதையை கணித்து விடலாம்.
