Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் விஜயிற்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது ரசிகர்களை கவர வேண்டும் என்பதே பெரிய கவலையாக இருக்குமாம். அதற்கு ஏற்றார் போல சமூகத்தின் சில பிரச்சனைகளை தனது படங்களில் சமீபகாலமாக பேசி வருகிறார். தெறி படத்தில் பாலியல் குற்றம், பைரவா படத்தில் கல்லூரி முறைக்கேடுகள், மருத்துவத்துறை பற்றி மெர்சல், தண்ணீர் பிரச்சனை பற்றி கத்தியில் என எல்லா படங்களும் சமகால நிலைமையையே எடுத்து சொல்லும். இதை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
ஏறத்தாழ 60 சதவீதத்துக்கு அதிகமான படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், படக்குழு தற்போது அமெரிக்காவில் பிஸியாக ஷூட்டிங்கில் உள்ளனர். இப்படத்தில் விஜய் எப்போதும் இல்லாமல் ஸ்டைலிஷாக நடித்து வருவதால் ரசிகர்கள் செம ஆவலாக வெயிட் செய்து வருகின்றனர். படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. படத்தின் டைட்டில் பலநாட்களாக சஸ்பென்ஸில் வைக்கப்பட்டு இருந்தது. என்னவா இருக்கும் என்று யோசித்த ரசிகர்களுக்கு விஜயின் பிறந்தநாளுக்கு முந்தைய தினம் அந்த விடைக்கான பதிலை படக்குழு அறிவித்தது.
அதன்படி, இக்கூட்டணி முதல்முறையாக ஆயுத பெயரை விடுத்து, சர்கார் என்ற பெயரை படத்தின் தலைப்பாக அறிவித்தது. பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் வைரலாகி விட்டது. அதில் விஜய் சிகரெட் பிடிப்பது வேறு ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜய் இப்படத்தில் ஒரு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு உள்ளவராகவோ, அரசாங்கத்தையே ஆட்டி வைக்கும் தொழிலதிபராகவோ நடிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த ஒரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இத்தகவலை சிறிதாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் படத்திற்கு மெகா ராக்கெட்டில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
