Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருகிற 24 ம் தேதி வெளியாகபோகும் சர்கார் படத்தின் பாடல் இதுதான்.!
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் சர்க்கார் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார் படத்தை ஏ ஆர் முருகதாஸ், இயக்கியுள்ளார், மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

vijay-sarkar
பிரம்மாண்டமாக தயாரித்து வரும் சன் பிக்சர் நிறுவனம் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில சர்ச்சைகளை சந்தித்தது, இந்த நிலை படத்தின் முக்கிய அறிவிப்பை சமீபத்தில் அறிவித்துள்ளார்கள் ஆம் படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
என்ன பாடல் வெளியாகப் போகிறது என்று பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் படத்தில் அறிமுக பாடல் இல்லை என்றும் படத்தின் இடையில் இருக்கும் ஒரு எழுச்சி மிக்க பாடல் என்றும் அரசியல் அவலங்களை கூறும் வகையில் பாடல் வரிகள் இருக்கும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது, இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை, வருகிற 24-ஆம் தேதி வரை காத்திருப்போம் விவேக் பாடல் வரிசையில் ரகுமான் இசையில் இந்தப் பாடலைக் கேட்க.
