Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியின் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இவை தான்.
சர்கார்
தளபதி விஜயின் அரசியல் என்ட்ரியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட படமே சர்கார். சன் பிக்ச்சர்ஸ், முருகதாஸ், விஜய் என இவர்கள் கூட்டணியில் அசத்தல் வெற்றி கொடுத்துள்ளனர்.
எனினும் தற்பொழுது உள்ள அரசியல் காட்சிகள், சூழல் மக்கள் நிலை என துகில் உரித்து பல இடங்களில் காட்டியுள்ளனர். இதனால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தனர்.

sarkar-120-feet
இந்நிலையில் பேனர் கிழிப்பு, போராட்டம் என செல்ல, சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது.
அவர் நீக்கிய காட்சிகள் இவை தான். ..
1. ஏழாம் ரீலில் இடம் பெறும் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களை தீயில் தூக்கி போடும் காட்சி!
2. ஏழு மற்றும் எட்டாவது ரீலில் இடம் பெறும் கோமளவல்லி என்ற பெயரில் இடம்பெறும் ‘கோமள’ என்ற வார்த்தை நீக்கம்!
3. நான்காவது ரீலில் வரும் ‘பொதுப்பணித்துறை’ என்ற வார்த்தை நீக்கம்!
4. ஏழாவது ரீலில் வரும் 56 வருஷம் என்ற வார்த்தை நீக்கம்!
இந்த மாற்றங்களுக்கு பிறகு இந்த படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 44 நிமிடங்கள் 41 விநாடிகள்.
