Tamil Cinema News | சினிமா செய்திகள்
நள்ளிரவில் ரிலீஸ் ஆகிறது சர்கார்.? முழு மூச்சில் படக்குழு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

sarkar
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது என்றால் விஜய் மேடையில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
அடுத்ததாக ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது சர்கார் படத்தின் டீஸர் எப்போது என்பதுதான், இந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக தற்போது ஒரு செய்தி வந்துள்ளது சர்க்கார் படத்தை தீபாவளி அன்று இரவு ஒரு மணிக்கு அதாவது அதிகாலை சிறப்புக் காட்சி 1 மணிக்கு திரையிடப் போவதாக ஒரு தியேட்டர் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தகவலை தெரிந்து கொண்ட பல திரையரங்குகள் இரவு 1 மணி காட்சி திரையிட அனுமதி கேட்டு வருவதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது இதற்கான முழு முயற்சிகளில் அதிரடியாக இறங்கியுள்ளது படக்குழு இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
