Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.! எங்கிருத்து தான் வராங்களோ இவுங்க ரசிகர்கள் கவலை
தமிழ் சினிமாவில் தற்போது ராட்சசன் மற்றும் 96 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது, இந்த நிலையில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த தனுஷ் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் விஷால் நடித்து முடித்துள்ள சண்டைகோழி திரைப்படமும் அடுத்ததாக வெளியாக இருக்கிறது, இந்த படங்களை எல்லாம் தாண்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பது விஜய் நடித்து முடித்துள்ள சர்கார் திரைப்படம் தான் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
படக்குழு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது என அறிவித்துள்ளார்கள் தவிர இன்னும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இதற்கு இடையில் வருன் தேவராஜ் என்பவர்,சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என வரிந்து கட்டிக் கொண்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் இது தற்போது சூடுபிடித்துள்ளது.
அதாவது தேவராஜ் சொன்ன கதையும் சர்க்கார் கதையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இரண்டும் ஒன்றாக இருக்கிறதாம் இதனால் பெரிய பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
