Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் சர்கார்! அடங்காத சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் நடத்தும் வியாபார விளம்பரங்கள் கொஞ்சம் அளவு மீறி தான் செய்கிறது. ஒரு காலத்தில் ஒரு படத்தின் ட்ரெய்லர் டிரைலர் ரிலீஸ் செய்தார்கள், பின்னர் டீஸரில் அதன் பின்னர் மோஷன் போஸ்டர் என்றார்கள் இப்பொழுது மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதியை ஒரு செய்தியாக சொல்கிறார்கள். இந்த சோசியல் மீடியா வந்ததிலிருந்து தயாரிப்பாளர்களின் விளம்பர தொல்லை தாங்க முடியவில்லை.

vijay-sarkar
சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் 24ம் தேதி வரும் என்று சொன்னார்கள். இப்பொழுது அடுத்து செய்தியாக ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றி செய்திகள் இருந்துள்ளார்கள் அதாவது நிகழ்ச்சி நடக்கும் இடம் அரங்கம் இல்லையாம் ரசிகர்கள் அனைவரும் இருக்கும்படி இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இதுபற்றிய அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்களாம். #Sarkarkondattam என்ற ஹேஷ்டேக்கில் இந்த தகவலை கூறியுள்ளனர். சர்க்கார் வெளியீட்டு விழா இந்தியாவில் நடக்குமா என்று தெரியவில்லை. இன்று மாலை அதனைப்பற்றி 6 மணிக்கு தெரிந்துகொள்ளலாம்.
There’s no hall big enough to seat all Thalapathy Vijay’s fans. So here is a chance for a select few to attend the #Sarkar Audio Launch in person! Details Tomorrow at 6pm. #SarkarKondattam continues! pic.twitter.com/nsM1HoTjep
— Sun Pictures (@sunpictures) September 19, 2018
