Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்திற்கு முதலில் என்ன டைட்டில் வைத்திருந்தார்கள் தெரியுமா.! முருகதாஸ் கூறிய மாஸ் தகவல்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் சர்கார் இந்த படத்தில் முருகதாஸ் புது விதமாக என்ன செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

sarkar-box-office
சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் நல்ல வசூல் செய்துள்ளது அதனால் ரசிகர்கள் சர்கார் படம் எப்படி இருக்கும் என்ன கதை இருக்கும் என்று அவர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது.
மேலும் சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது இந்த நிலையில் நாளை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது இந்த நேரத்தில் சர்கார் படத்தை பற்றி இயக்குனர் முருகதாஸ் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் முதலில் சர்கார் படத்துக்கு டைட்டிலாக வில்லாதி வில்லன் என்று தான் வைத்திருந்தார் அதன் பிறகுதான் மாற்றினேன் என கூறியுள்ளார்.
