Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் வரலாறு காணாத வியாபாரம்! கலக்கத்தில் முருகதாஸ்
சர்கார் படத்தின் பிசினஸ் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு வியாபாரம் ஆகி இருக்கு. கோலிவுட் வட்டாரம் சற்று அதிர்ச்சியாகி உள்ளது.. பொதுவாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் ஆனால் சர்கார் படத்தின் பிசினஸ் நிலவரம் தெரியவரும் பொழுது ரஜினிக்கு அடுத்து விஜய் படம்தான் இந்த அளவுக்கு வியாபாரம் ஆகி இருக்கு என்று பேசுகிறார்கள்.
எம்ஜிஆர் உச்சத்தில் இருக்கும் பொழுது அரசியலுக்கு சென்றார். அதன்பின் அந்த இடத்தை ரஜினிகாந்த் பெற்றார் ரஜினிக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வருவது என்பது ரொம்ப நாள் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால் சர்கார் படத்தின் பிசினஸ் மிரள வைக்கிறது. ஏற்கனவே பைரவா படத்தில் நிறைய எதிர்பார்ப்பு வந்து பிசினஸ் ஆகியது ஆனால் எதிர்பார்த்த கலெக்ஷன் வரவில்லை. அடுத்து மெர்சல் படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெரும்பொழுது பாஜகவினறால் வெற்றி பெற்று படம் பெரும் வசூலை அள்ளியது.
மெர்சல் படத்தின் 130 கோடி வசூலை சர்கார் படம் வெல்லுமா? ஆம் வென்றுவிட்டது. சர்கார் படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியுள்ளது. தமிழ்நாடு தியேட்டரிகள் பிஸ்னெஸ் 80 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இது மெர்சல் படத்தை விட 15 கோடி அதிகம். ஓவர்சீஸ் பிசினஸ், ஹிந்தி ரைட்ஸ் என்ன அனைத்தும் சேர்த்து மொத்தம் 110 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்கு.

sarkar
இதுமட்டுமில்லாமல் டிஜிட்டல் வியாபாரம் என எல்லாத்தையும் சேர்த்தால் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரமாகிறது. ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் மற்றும் உலக தமிழ் ரசிகர்களால் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்டது ஆனால் இப்போது பிரச்சினை என்னவென்றால் வியாபாரமான பணம் திரும்பக் கிடைக்குமா கிடைக்காதா என்பதுதான். மொத்தமாக நூறு ரூபாய் டிக்கெட்டில் ஒரு கோடி பேர் படம் பார்த்தால் மட்டும் 100 கோடி ரூபாய் வரும். பத்து நாள் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடினால் மட்டும் 100 கோடி ரூபாய் வர வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக இது சன்டிவி வியாபாரம் என்பதால் கண்டிப்பாக அவர்களது விளம்பரத்தினால் இந்த பணத்தை எடுக்க முடியும் என்று நம்புகின்றனர். இது எல்லாம் இனி முருகதாஸ் கையில் தான் உள்ளது.
