Connect with us
Cinemapettai

Cinemapettai

armurugasdoss-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் பிரச்சினையில் ஏ.ஆர்.முருகதாஸ் முன்கூட்டியே ஜாமீன்.. சினிமா வட்டாரங்களில் பரபரப்பு!

சர்கார் பிரச்சினை மிகப்பெருமளவில் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் குறைகளை அழுத்தமாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து படக்குழுவினர் இரண்டு காட்சிகளை விலக்கிக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர். கோமளவள்ளி என்ற பெயரை மற்றும் இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை நீக்கி கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஆளும் கட்சியின் அராஜகத்தால் நேற்றிரவு ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்வதற்காக காவல்துறை அவர் வீட்டிற்கு சென்றுள்ளது. ஆனால் அவர் அங்கு இல்லை என்று திரும்பி சென்று விட்டனர்.

சர்கார் விவகாரத்தில் முன்கூட்டியே ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸின் வழக்கறிஞர் முறையிட்டுள்ளார். இதனை  இன்று மதியம் விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சினிமா துறையை மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதில் உண்மையை உரக்கச் சொன்னால் தப்பில்லை என்றும் அவளோ வெட்கமாக இருந்தது விஷத்தை குடித்து சாக வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. மக்களாகிய நாம் எதிர்த்து நின்று என்று கேள்வி கேட்கிறோம் அன்றுதான் ஒரு ஜனநாயக நாடு உருவாகும் என்றும் இல்லையெனில் இந்த சமுதாயம் நம்மளை அடிமைகளாக்கி விடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top