Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆரம்பத்திலேயே அசத்தும் சர்கார்.! சர்காருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.! கொண்டாட்டத்த்தின் உச்சத்தில் படக்குழு

தளபதி விஜய் சர்கார் படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த நிலையில் திரைப்படத்தை வருகிற தீபாவளிக்கு பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்துள்ளது, சமீபத்தில் வெளியாகிய சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது இந்தநிலையில் சர்கார் பற்றிய அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 24-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்கிறார்கள், தற்போது இந்த கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது, ஆம் சர்க்கார் படத்திற்கு விலங்கு நல வாரியம் எந்த தடையும் இல்லாமல் சான்றிதழ் கொடுத்துள்ளது இது படக்குழுவை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது, மேலும் ரசிகர்களும் இதைப் பார்த்து கொண்டாடி வருகிறார்கள் ஏனென்றால் மெர்சல் படத்தில் விலங்குகள் நலவாரியம் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.
