விஜய் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல்  ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

sarkar

சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது இதில் விஜய் மேடையில் பேசியது மிகவும் வைரலானது, சர்கார் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக் கொண்டே போகிறது அது மட்டுமில்லாமல் சர்கார் படத்தின் பாடல் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது விஜய் எப்படி நடனமாடி இருப்பார் அந்த நடனத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டான்ஸ்  பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் விஜய் பாடலுக்காக எப்பொழுதும் ஒரு சர்ப்ரைஸ் வைப்பேன் நான், அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்துள்ளேன் இதற்காக ஏ ஆர் ரகுமான் எங்களுக்கு உதவி செய்தார் என அந்த பேட்டியில் கூறினார்.