Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் சாதனையை தகர்த்த ரஜினியின் 2.0 செம்ம மாஸ்.!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியானது ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் பெற்று நல்ல வசூல் செய்து சாதனை அடைந்தது பாக்ஸ் ஆபீஸில் 250 கோடிகளுக்கு மேல் வசூலாகி சாதனை செய்துள்ளது.
பல சாதனைகளை செய்த இந்த திரைப்படம் விஜய்யின் மெர்சல் சாதனையை முறியடித்தது இந்நிலையில் நேற்று வெளியாகிய திரைப்படம் ரஜினியின் 2.0 இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முதல் நாள் சென்னை வசூல் விவரம் தெரியவந்துள்ளது ஆம் தற்போது சென்னையில் மட்டும் 2.64 கோடி வசூல் செய்துள்ளது இந்த நிலையில் இந்த வசூல் சர்கார் வசூலை விட அதிகம் என்பதால் சர்காரின் சாதனையை ரஜினியின் 2.0 முறியடித்துள்ளது அது மட்டுமில்லாமல் சென்னை பாக்ஸ் ஆபீஸில் ஆல்டைம் ரெகார்ட் என்ற சிறப்பையும் 2.0 திரைப்படம் பெற்றுள்ளது, 2.0 – Chennai Box Office 1 Day: Rs. 2.64 Cr, Sarkar – Chennai Box Office 1 Day : 2.37 Cr, இதனால் ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
