தளபதி விஜய் படம் என்றாலே ஒரு தனி மாஸ் தான். சர்கார் படத்தின் புதிய ப்ரோமோ தினமும் வெளியிட்டு வருகிறது சன் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிப்பதாக உள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ப்ரீ-புக்கிங் முடிந்துவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு பிறப்பித்த ஆணையின்படி சர்கார் 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் இப்பொழுது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஐந்து காட்சிகளை திரையிடலாம் என்று கூறியுள்ளனர். காலை 9 மணிமுதல் மறுநாள் காலை 1 மணி வரை காட்சிகள் திரையிடலாம். இப்படம் 3500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இது உலகளவில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

vijay rajini
vijay rajini-

 

மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது 2.0வின் ட்ரெய்லர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் வழக்கம் போல் இல்லாமல் சங்கரின் மிகப் பிரம்மாண்டமான VFX-கிராபிக்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் படத்தின் ரிலீஸுக்கு பின்பு 15 நாட்கள் கழித்து வெளியிடப்பட உள்ளது.

katrin-mozhi
katrin-mozhivijay rajini

 

சர்கார் மற்றும் 2.0 படங்களின் எதிர்பார்ப்பு உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வரும் நவம்பர் 16-ஆம் தேதி ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி, விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிர்பிடித்தவன், உத்தரவு மகாராஜா, மற்றும் செய் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.