கே.எம். சர்ஜுன்

குறும்பட இயக்குனராக சினிமா உலகில் கால்தடம் பதித்தவர். இவர் அடுத்ததாக நயன்தாரவை வைத்து திகில் படம் ஒன்றை இயக்கப்போகிறார் என்பது நாம் அறிந்த செய்தியே. இவர் இதற்கு முன்னரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளது இங்கு பலருக்கு தெரியாத ஒன்று .

Sarjun Km

லட்சுமி

என்னதான் இன்று உலகமயமாக்கல், பெண் சுதந்திரம் என்று பேசினாலும் பெண்கள் இன்றளவும் தங்கள் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் சொல்லியது குறும்படம் லட்சுமி.

மா

அடுத்ததாக பள்ளிப்பருவத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது பாலினக்கவற்சியினால் கர்ப்பமாகும் தன் மகளை, எப்படி ஒரு தாய்
புரிந்து கொண்டு அவளை தேற்றி மனதளவில் அந்த குழந்தையை திடப்படுத்தி, அவள் மீது நம்பிக்கை வைத்து அவளை மீண்டும் வாழ்வில் சுதந்திரமாக நடக்கும் தைரியத்தை கொடுக்கும் குறும்படம் தான் மா.

எச்சரிக்கை

sarjun with manirathinam

இந்த இரண்டு குறும்படங்கள் எடுப்பதற்கு முன்பே அவர் இயக்கி இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் ” எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் பகுதி”. சத்யராஜ் வரலக்ஷ்மி சரத்குமார் இப்படத்தில் நடித்துள்ளனர். கிஷோர் மற்றும் விவேக் வில்லனாக நடித்துள்ளனர்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இதற்கு சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை சி.பி.கணேஷுடன் இணைந்து ‘டைம் லைன் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரித்துள்ளார்.

முன்பே முழு படமும் முடிவடைந்தாலும் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. காரணம் எதுவும் தெளிவாக சொல்லப்படவில்லை. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் வாங்கியுள்ளார். இதனை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

echarikkai release date

மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். எந்த புதிய படமும் ரிலீசாகாது என்று அறிவித்தனர். இந்த பிரச்சனை முடிந்த உடன் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக
தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.