செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 18, 2025

சர்தார் படத்தின் முதல் 2 நாளில் வசூல் மட்டும் இத்தனை கோடியா.. டாப் கியரில் செல்லும் கார்த்தி

கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ட்ரைலரில் கூட கண்டுபிடிக்காத அளவுக்கு இந்த படத்தில் கார்த்தி 16 கெட்டப்பில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் முதல் நாளில் 3.7 கோடியை வசூலித்ததை தொடர்ந்து 2-வது நாளிலும் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து சர்தார் படம் கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்துள்ளது.

Also Read: வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

முக்கிய சமுதாய பிரச்சினையை கையில் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ராசி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். அந்த வகையில் இப்போது இந்த திரைப்படம் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது.

முதல் நாளில் 4 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூலித்த சர்தார் 2-வது நாளில் 5 முதல் 6 கோடி வசூலை வாரி குவித்து தீபாவளி ரேஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இப்படி முதல் நாளை விட கூடுதலாக 2 கோடிவரை கலெக்சன் செய்திருக்கும் சர்தார் தொடர் விடுமுறை நாட்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்க போகிறது.

Also Read: உச்ச நடிகர்களை ஓரங்கட்டிய கார்த்தி.. சத்தமில்லாமல் ஹாட்ரிக் வெற்றி அடித்த மகிழ்ச்சி.!

எனவே முதல் இரண்டு நாட்களில் மட்டும் 10 கோடி வரை கலெக்சன் செய்திருக்கும் சர்தார், தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் அதிலும் முக்கியமாக அமெரிக்காவில் சர்தாருக்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல ஓபனிங் கிடைத்து வருகிறது. ஆனால் இந்தப் படத்துடன் இணைந்து வெளிவந்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்ப பெறவில்லை.

மேலும் சத்தமில்லாமல் கார்த்தி பல வருடங்கள் நிறைய வெற்றிகளை கொடுத்து வருகிறார் அதே போல் இந்த வருடமும் வெற்றியை கொடுத்து டாப் கியரில் செல்கிறார் என கார்த்தியை அனைத்து நடிகர்களும் பாராட்டுகின்றனர்,

Also Read: அதிரடி சரவெடி, கார்த்தியின் சர்தார் முழு விமர்சனம்.. பேன் இந்தியா தரத்தில் ஒரு தமிழ் படம்

Trending News