வயதான தோற்றத்தில் மாஸ் காட்டும் கார்த்தி.. இணையத்தை கலக்கும் சர்தார் படத்தின் நியூ லுக்

கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் கார்த்தி எப்போதும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பவர். இவர் அறிமுகமான பருத்திவீரன் படம் முதல் தற்போது வரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே வித்தியாசமான கதை களங்களை கொண்டவை தான். அந்த வகையில் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் நியூ லுக் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துள்ள கார்த்தி தற்போது இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிறுத்தை படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இளமையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்த கார்த்தி முதல் முறையாக சர்தார் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறாராம். அதன்படி நரைத்த முடி மற்றும் தாடியுடன் கார்த்தி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டே முடிய வேண்டிய சர்தார் படம் தற்போது வரை முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.

சர்தார் படத்தில் கர்ணன் பட புகழ் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார். தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கி உள்ளதாம்.

karthi-sardar
karthi-sardar

சர்தார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என்பதால் இந்த இடைப்பட்ட நேரத்தில் கார்த்தி கொம்பன் இயக்குனருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விருமன் என்ற படத்தில் நடித்து முடித்தே விட்டார். கிட்டத்தட்ட விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் தற்போது கார்த்தி சர்தார் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறாராம்.

karthi-sardar
karthi-sardar
Sharing Is Caring:

அதிகம் படித்தவை