Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரெண்டு பேரும் செய்த ஒரே தப்பு.. ஆனா பாலாவுக்கு மட்டும் ரெட்கார்டு கொடுக்காதது ஏன்? முதன் முதலாக கோபத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
தமிழ் சின்னத்திரையில் வருடாவருடம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தாமதமாக ஆரம்பிச்சாலும் ஆண்டவன் புண்ணியத்துல டாப் டக்கரா ஓடிட்டு இருக்கு.
மேலும் இந்த சீசனில் கொஞ்சம் கோக்குமாக்கான போட்டியாளர் என்றால் அது பாலாஜி தான். ஏனெனில் நிகழ்ச்சி தொடங்கிய சில காலத்திலேயே சனத்தின் பியூட்டி பேஜன்ட் பற்றியும், அதில் கலந்து கொண்ட பெண்களை பற்றியும் தவறான கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதனால் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இன்று வரை பாலாஜி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வருவதோடு, மற்ற கன்டஸ்டன்ட்களை மிரளவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற சரவணன் பாலாஜிக்கு ரெக்கார்டு கொடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன.
அதாவது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் தான் சரவணன். ஏனெனில் ஒரு எபிசோடில் சரவணனும் பெண்களைப் பற்றி அவதூறாக கமலிடம் பேசியிருந்தார். இதற்காக சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் பாலாஜி இதே போன்ற ஒரு விஷயத்தை தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் வெளியேற்றப்படாமல் இருப்பது ஏன் என்று சரவணனிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டதாம்.
அதற்கு சரவணன், ‘நான் விஜய் டிவி பற்றியோ, பிக்பாஸ் பற்றியோ எங்கேயும் எப்போதும் பேசியதே கிடையாது. பாலாஜிக்கு ஏன் ரெக்கார்டு கொடுக்கலன்றத கமல் சாரும், அவரோட டீமும் தான் சொல்லணும். நான் ஏன் நிகழ்ச்சிய விட்டு போனேன்னே எனக்கு தெரியாதப்போ, பாலாஜிய பத்தி நான் எப்படி சொல்ல முடியும்?’ என்று பதில் அளித்தாராம்.

Balaji-Saravanan
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஹாட் டாப்பிக்காக பாலாஜி இருந்து வருவதால்தான், அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படவில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.
