புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாண்டியனின் மொத்த கோபத்தையும் அடக்கிய சரவணன்.. நீலிக்கண்ணீர் வடித்த தங்கமயில், குத்தி காட்டி பேசிய மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் தான் பணத்தை எடுத்திருக்கிறார் என்று பாண்டியனுக்கு தெரிந்ததால் மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக கதிரிடம் எடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கதிர் அந்த பணத்திற்காக தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டு பார்த்து விட்டார். அதே மாதிரி செந்தில் மற்றும் சரவணனும் தெரிஞ்ச நண்பர்களிடம் பணம் கேட்டார்கள்.

யாருக்கும் பணம் கிடைக்காததால் எல்லோரும் பதட்டமாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கோமதியும், கதிரின் நிலைமை நினைத்து புலம்புகிறார். அப்பொழுது மீனா மற்றும் ராஜி, கோமதிக்கு ஆறுதல் சொல்லி பக்குவப்படுத்துகிறார்கள். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த பாண்டியன், பிரச்சனை பண்ணும் விதமாக கதிரிடம் பணத்தை கேட்கிறார்.

கதிர் எனக்கு பணம் கிடைக்கவில்லை இன்னும் எனக்கு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்கள் நான் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் பாண்டியன் உன் இஷ்டப்படி எல்லாம் நான் நடந்து கொள்ள முடியாது. எனக்கு இப்பவே பணம் வேணும், இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ளுகிறார். அப்பொழுது அங்கிருந்த சரவணன் குற்ற உணர்ச்சியால் எல்லா உண்மையும் சொல்ல தயாராகி விட்டார்.

ஆளால் சரவணன் உண்மையை சொல்லிவிட்டால் எல்லோருடைய கோபமும் நம் மீது திரும்பி விடும் என்ற பயத்தில் தங்கமயில், சரவணனை சொல்லவிடாமல் தடுக்கிறார். ஆனால் சரவணன், கதிருக்கு சப்போட்டாக பேசுகிறார். உடனே பாண்டியன், நீ ஏன் உன் தம்பிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி பேசுகிறாய் என்று கோபப்படுகிறார்.

அப்பொழுது சரவணன், கதிர் அவனுக்காக பணத்தை எடுக்கல. எனக்கு உதவி பண்ணும் விதமாக எனக்காக எடுத்துக் கொடுத்தார் என்று சொல்கிறார். உடனே பாண்டியன் என்ன சொல்லுகிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கேட்கிறார். அதற்கு அனைத்தையும் சொல்லும் விதமாக சரவணன், தங்கமயில் தவறாக ஹோட்டலை புக் பண்ணிட்டார்.

ஹோட்டலில் தங்குவதற்கு மொத்தம் 26,000 ரூபாய் தேவைப்பட்டது. அதனால அந்த நேரத்தில் எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் தம்பிகளுக்கு போன் பண்ணி சொன்னேன். உடனே கதிர் தான் எல்லா பணத்தையும் ஏற்பாடு பண்ணி எனக்கு அனுப்பி வைத்தான் என்று சொல்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாண்டியன் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டார்.

ஆனாலும் கதிர் மீது ஒரு தவறு இருக்கு என்று தெரிந்ததும் வானத்துக்கு பூமிக்கும் குதித்த பாண்டியன், எல்லா தப்பும் தங்கமயில் மீது தான் இருக்கிறது என்று தெரிந்ததும் கோபப்படாமல் ஏன் இப்படி பண்ணி விட்டாய். எதுனாலும் என்னிடம் சொல்லி இருக்கலாம். நம் குடும்ப சூழ்நிலை, பணத்தின் அருமை தெரிந்து நாம் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

இதுதான் சான்ஸ் என்று மீனா, நம்ம எல்லாம் கொடைக்கானலுக்கு போகும் போது ரூம் வாடகை 2000 ரூபாய் என்று தெரிந்ததும் அதற்கு வேண்டாம் என்று சொன்னீங்க. நானும் செந்திலும் சென்னைக்கு போகும்பொழுது 200 ரூபாய் கொடுத்து பார்த்து செலவு பண்ணுன்னு சொன்னீங்க என்று பாண்டியன் செய்த தவறை குத்தி காட்டி பேசுகிறார். உடனே கோமதி, மீனா கேட்பது சரிதான் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று பாண்டியனிடம் சொல்கிறார்.

ஆனாலும் பாண்டியன், தங்கமயில் மீது எந்த கோபமும் படாமல் இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு போய்விடுகிறார். பிறகு கோமதி, மீனா செந்தில் கல்யாணம் பண்ணினால் என் பிள்ளை தான் வெளில போகணும். இப்போ சரவணன் தங்கமயில் தேன்நிலவுக்காக எல்லா தப்பையும் என் பிள்ளை மேல தான் விழுந்து இப்போ வெளியே போகிற நிலைமை வந்துவிட்டது.

இனியாவது உங்க பிரச்சனைக்கு நீங்களே சரி பண்ண பாருங்க என்று எல்லோரிடமும் கோபமாக திட்டிவிட்டு போய்விடுகிறார். இவ்வளவு பிரச்சினை நடந்தும் தங்கமயில் எதுவும் பேசாமல் நீலி கண்ணீர் வடித்து அனைவரையும் திசை திருப்பி விட்டார். ஆனாலும் சரவணன் உண்மையை சொன்னதால் கோபத்துடன் தங்கமயில் ரூமுக்கு போய் விடுகிறார். எது எப்படியோ இந்த ஒரு விஷயத்துக்காக தங்கமயில் மாட்டி பாண்டியன் முன்னாடி அவமானப்பட்டது ஓரளவுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News