திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

அம்மாவை எதிர்க்கத் தயாராகும் சரவணன்.. இரண்டாக உடையும் ராஜா ராணி குடும்பம்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சந்தியாவின் கனவு என்ன என்பதை இவ்வளவு நாளாக தெரிந்து கொள்ள துடித்த சரவணனுக்கு, சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை தெரிந்து கொண்டான்.

இன்னிலையில் சந்தியாவின் அப்பா அம்மா ஆசைப்பட்ட கனவை கணவராக இருந்து சந்தியாவிற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாவை போலீஸ் அதிகாரியாக மாற்றும் பொறுப்பை நான் எடுக்கப் போகிறேன் என சரவணன் தன்னுடைய அம்மாவிடம் தெரியப்படுத்துகிறான்.

உடனே அவனுடைய அம்மா, ‘போலீஸ் என்றாலே தனக்குப் பிடிக்காது என்றிருக்கும் நிலையில், தன்னுடைய மருமகளையே போலீசாக மாற்றப் போகிறேன் என என்னிடம் கூறுகிறாயா!’ என திட்டுகிறாள்.

அத்துடன் இந்தப் பேச்சை இதோட விட்டுவிடு என கண்டிப்பாக சரவணனின் அம்மா சிவகாமி, வீட்டில் இருப்பவர்கள் முன்னிலையில் கூறுகிறார். இதைக் கேட்டதும் வில்லி அர்ச்சனாவிற்கு குளுகுளுவென்று இருக்கிறது.

இருப்பினும் சரவணன் எப்படியாவது அம்மாவின் மனதை மாற்றி சந்தியாவின் கனவை நிறைவேற்ற இனி வரும் நாட்களில் முயற்சி செய்யப் போகிறான். அதற்குள்ளே நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் ஆலியா, பிரசவத்தை முடித்துவிட்டு மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக ராஜா ராணி2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி என்று கொடுக்க உள்ளார்.

இதெல்லாம் நடக்கும் போது சரவணன் தன்னுடைய அம்மா சிவகாமியை எதிர்த்து கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு சந்தியாவிற்காக துணை நிற்க போகிறான். அப்போது சரவணனுக்கு அவளுடைய அப்பா மட்டுமே வீட்டில் சப்போர்ட்டாக நிற்பார். மற்றவர்கள் அனைவரும் சரவணனுக்கு எதிராக நின்று சந்தியாவின் கனவை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டையாய் நிற்பார்கள்.

- Advertisement -spot_img

Trending News