செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பாண்டியனுக்காக தங்கமயிலிடம் உருகும் சரவணன்.. கோமதியை டார்ச்சர் செய்யும் மருமகள், கதிர் கொடுத்த பணம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று ஒரு சொலவடை சொல்வது போல் தங்கமயில், பாண்டியன் வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு எக்கச்சக்கமான பொய்களையும் பித்தலாட்டங்களையும் செய்து வந்திருக்கிறார். அதை சமாளிக்கும் விதமாக தங்கமயிலின் அப்பா மற்றும் அம்மா தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தை ஏமாற்றி வருகிறார்கள்.

அப்படித்தான் இப்பொழுது தங்கமயில் ஹோட்டலில் அதிகம் செலவு செய்ததால் பாண்டியன் கோபமாக இருக்கிறார் என்று தெரிந்து சமரசம் செய்ய வந்த தங்கமயிலின் அப்பா அம்மா தேவை இல்லாமல் குலதெய்வம் கோயில் என்று வாய் விட்டு விட்டார்கள். அதனால் வேறு வழி இல்லாத தங்கமயிலின் அப்பா ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு கோவிலை காட்டி இதுதான் எங்கள் குலதெய்வம் கோயில் என்று சொல்லி பாண்டியன் குடும்பத்தை கூட்டிட்டு போய் விட்டார்கள்.

அங்கே அனைவரும் சேர்ந்து பொங்கல் விட்டு, குலசாமியை கும்பிட்டு, சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் பாண்டியன் கோபம் குறையாதுதால் தங்கமயில் பேச போனால் முகம் கொடுத்து பேசாமல் கஷ்டப்படுத்தி விடுகிறார். அந்த நேரத்தில் பாண்டியன் ஒரு ஓரமாக நின்று போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே இருந்த கூரை ஒன்று பாண்டியன் மீது விழப்போனது.

அதை பார்த்த தங்கமயில், மாமா என்று கத்தி பாண்டியனை தள்ளிவிட்டு தங்கமயில் மேல் கூரை விழுந்து விட்டது. ஆனால் கூரை விழுந்து ரத்தக்கரை ஏற்பட்டிருக்கிறது என்று காட்டுவது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. அதிலும் அங்கிருந்த மொத்த குடும்பமும் தங்கமயில் ஏதோ தியாகம் பண்ணிட்டார் போல ஓவராக ஆக்ஷன் காட்டியது. அத்துடன் தங்கமயிலை பத்திரமாக பாண்டியன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள்.

வந்ததும் ஒவ்வொருவரும் அக்கறையாக பேசி பாண்டியன், எனக்கு வாய்த்த மருமகள் போல வேறு யாருமில்லை என்று பெருமையுடன் பேச ஆரம்பித்து விட்டார். சும்மாவே பாண்டியன், தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஆடுவார். இனி இந்த ஒரு விஷயத்திற்காகவே பாண்டியனை கையில பிடிக்க முடியாது. இவர்தான் இப்படி என்றால் சரவணன் அதுக்கு மேல, தன்னுடைய அப்பா உயிரை காப்பாற்றிய தங்கமயில் இடம் உருகி உருகி பேசி பாசத்தைக் காட்டி வருகிறார்.

ஆனால் இவ்வளவு நாள் இந்த பாசம் எங்க போச்சு என்பதற்கு ஏற்ப தங்கமயிலும், சரவணன் காட்டும் அக்கறைக்கும் பாசத்துக்கும் வியந்து போய் பார்க்கிறார். அடுத்ததாக கதிர், அப்பாவிடம் சொன்னபடி மாத சம்பளமாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். அதையும் பாண்டியன் வாங்கி யாருக்கும் தெரியாமல் கோமதியிடம் கதிர் அக்கவுண்டில் இந்த பணத்தை போட்டு விடு என்று சொல்கிறார்.

உடனே கோமதி, நீங்கள் கதிர் பணத்தையும் செந்தில் கடையில் வேலை பார்க்கிற பணத்தையும் ஒவ்வொருவருக்கும் தனியாக அக்கவுண்டில் போடுற விஷயத்தை அவங்களுக்கு தெரியப்படுத்தலாம். முன்னாடி மாதிரி இப்பொழுது கிடையாது ஒவ்வொருவருக்கும் பொண்டாட்டிகள் வந்து விட்டாச்சு. அதனால் நாம் என்ன பண்ணுகிறோம் என்று தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கோமதி சொல்கிறார்.

அதற்கு பாண்டியன், என்னை பற்றி யாரும் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. ஆனால் இப்பொழுது எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதற்கிடையில் ராஜி, கோமதியிடம் மாமாவிடம் பேசி எப்படியாவது டியூஷன் எடுப்பதற்கு சம்மதம் வாங்கி கொடுங்கள் என்று டார்ச்சர் பண்ணி அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் இந்த விஷயத்தை எப்படி பேசுவது என்று தெரியாமல் கோமதி முழித்துக் கொண்டு வருகிறார்.

பிறகு கதிர், ராஜிவின் செலவுக்காக பணம் கொடுக்கிறார். ஆனால் ராஜி அந்த பணத்தை வாங்க மறுத்து விடுகிறார். எனக்கான செலவை நானே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அத்தையிடம் சொல்லி மாமாவிடம் பர்மிஷன் வாங்கி கொடுக்க சொல்லி இருக்கிறேன். எப்படியும் நான் டியூஷன் எடுக்க ஆரம்பித்து விடுவேன் என்று ராஜி, கதிரிடம் சொல்கிறார். கதிரும் ராஜி சொன்ன விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

- Advertisement -

Trending News