விஜய்க்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித்துக்கு ‘பூவெல்லாம் உன் வாசம்’ என எவர்க்ரீன் ஹிட்ஸ் கொடுத்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ எழில், அடுத்து உதயநிதியை வைத்து எடுக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’

இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கதாநாயகியாகவும், இன்னொரு கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார், படத்தில் சூரி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், யோகிபாபு, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.எழிலும், உதயநிதி ஸ்டாலினும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படமும் காமெடி ஜானர் படமாக உருவாகியுள்ளதாம். இந்த படம் மே 12ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தை தணிக்கைக் குழுவினர் பார்வைக்கு அனுப்பப்பட்டது. சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியிருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  இந்த படமெல்லாம் வருமா? வராதா? என்ற நிலைக்கு சென்ற படங்கள்- ஸ்பெஷல்

இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் அடுத்த கட்டமாக படத்தின் புரமோஷனுக்கு வரும்படி ரெஜினாவை அழைத்துள்ளனர். தெலுங்குப்படங்களில் நடிப்பதாக சொல்லி டேட் இல்லை என ரெஜினா வர மறுக்கிறாராம். முன்னதாக இந்த படத்தில்” எம்பூட்டு இருக்குது ஆசை ’ என்ற பாடலை ஷான்ரோல்டன் பாடினா சரியா இருக்கும்னு அவருக்காக ஒரு மாசம் வெயிட் பண்ணினார் இமான்.

அதிகம் படித்தவை:  இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகலை... எல்லா ஹீரோக்களையும் கரெக்ட் செய்த கைக்குள் போட்ட அறிமுக நடிகை!

அதனால் தான் பாடல் அவுட்புட் அவ்வளவு பிரமாதமா வந்திருக்கு என இமான் கூறியுள்ளார்…அவசரம் கூடாது என்பதற்காக அதே பாணியில் நடிகை வரும் வரை படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது…