Connect with us

Cinemapettai

பிக்பாஸ் சரவணன் வெளியே வந்ததற்கு காரணமே இதுதான்.! பரணி கூறியது

saravanan-bharani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் சரவணன் வெளியே வந்ததற்கு காரணமே இதுதான்.! பரணி கூறியது

பிக்பாஸில் சரவணன் பெண்களை அவதூறாக சித்தரித்ததால் வெளியேற்றப்பட்டார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் குழுவினர் ஏற்க மறுத்து ஒரு வாரம் கழித்து அவரை வெளியேற்றினார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஷெரின், சாக்ஷி, அபிராமி ஆகிய  போட்டியாளர்கள் அரைகுறை ஆபாச உடையில் சுற்றி திரிவது பிக் பாஸ் இருக்கு தவறாக தெரியவில்லையா?

இவர் கல்லூரிப் பருவத்தில் செய்த தவறை, யாரும் செய்து விடாதீர்கள் என்று கூறியது, தவறா? என்று ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். கவின் இரண்டு பெண்களை காதலிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது தவறில்லையா? தற்போது  வயதில் மூத்தவரான அபிராமி முகனை காதலிப்பது போன்று மக்களுக்கு ஒளிபரப்புவது தவறில்லையா? இவ்வளவு தவறுகளை தட்டிக் கேட்காமல் கலாச்சாரத்தை காப்பாற்றாமல் கல்லூரிப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை தவறாக சித்தரித்துவிட்டனர் பிக்பாஸ் குழுவினர்.

இது ஒருபுறம் இருக்க பிக் பாஸ் கடந்த போட்டியாளரான பரணி சரவணனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் சரவணன் மிகவும் வருத்தப்பட்டதாகும் மற்றும் தன் குழந்தையை பார்ப்பதற்காக தான் வெளியே வந்து உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு இப்படி ஒரு காரணம் பிக்பாஸ் கொடுத்தது எனக்கு அவமானமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதையும் பரணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

என்னதான் பரணி சமாதானப்படுத்தி நாளும் bigg boss போட்டியாளர்கள் சித்தபூவை மிகவும்  மிஸ் பண்றாங்க என்பதுதான் உண்மை. நடிகை கஸ்தூரி இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதால் கூட சரவணன் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top