வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாண்டியன் செய்த காரியத்தால் கதிரிடம் முட்டிக்கொள்ளும் சரவணன்.. தங்கமயிலை தாங்கும் மீனா ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் அஜாக்கிரதையால் செய்த காரியத்திற்காக கோமதி மற்றும் பாண்டியன் கோபமாக இருக்கிறார்கள். அந்த கோபத்தை காட்டும் விதமாக அடுப்பாங்கரையில் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது மீனா மற்றும் ராஜியிடம் கோமதி புலம்புகிறார். இதனை கேட்ட தங்கமயில் யாரிடமும் பேசாமல் ரூமுக்குள் போய் அழ ஆரம்பித்து விடுகிறார்.

பிறகு கதிர், சரவணனிடம் நீ ஏன் அவசரப்பட்டு உண்மையை சொன்னாய். இதனால் உனக்கு மட்டும் இல்லாமல் அண்ணிக்கும தேவையில்லாத பிரச்சினை என்று சொல்கிறார். அப்பொழுது பாண்டியன் கடைக்கு போகாமல் இங்கே என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கதிர் நான் உங்களிடம் இருந்து எடுத்த பணத்தை கூடிய சீக்கிரத்தில் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

உடனே பாண்டியன், ஹோட்டலுக்கு 26 ஆயிரம் ரூபாய் என்னிடமிருந்து 11,000 ரூபாய் எடுத்தாய். மீதமுள்ள பணத்துக்கு என்ன பண்ணினாய் என்று கேட்கிறார். அதற்கு கதிர் நான் வேலைக்கு போய் சேர்த்து வைத்த பணத்தை கொடுத்தேன் என்று சொல்லிய நிலையில் பாண்டியன் இப்படி ஒரு சூழ்நிலை தேவையா? எதுனாலும் பொறுமையா பார்த்து கவனமாக செய்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது.

நான் எதற்காக சொல்கிறேன் என்று உங்களுக்கு இப்பொழுது புரியாது என பேசிவிட்டு போகிறார். அப்பொழுது சரவணன் எனக்காக எடுத்த பணத்தை நானே கொடுத்துவிடுகிறேன் என்று கதிரிடம் சொல்கிறார். உடனே கதிர், நீ சம்பாதிக்கிற பணத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்து விடுவாய் உன்னால் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும் என்று கேட்கிறார்.

அதற்கு சரவணன், கதிரிடம் கையெடுத்து கும்பிட்டு இனி என்னுடைய பிரச்சனையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு ரூமுக்குள் அழுது கொண்டிருக்கும் தங்கமயிலை பார்த்து சமாதானப்படுத்துகிறார். அப்பொழுது சரவணன், உண்மையை சொல்லாமல் ஹோட்டலில் சொகுசாக இருந்தோம். இப்பொழுது அதற்கான தண்டனை அனுபவிக்கும் போது அதை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும்.

அதை விட்டுவிட்டு கதிர் அடி வாங்கினாலும் பரவாயில்லை என்று எப்படி என்னால் வேடிக்கை பார்க்க முடியும் என்று தங்கமயிலிடம் சொல்லி நீ எதை நினைத்தும் கவலைப்படாதே என ஆறுதல் பண்ணிவிட்டு வேலைக்கு கிளம்பி விடுகிறார். இதனை நினைத்து தங்கமயில் வெளியே போகாமல் ரூம்குள் அழுது கொண்டிருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட மீனா மற்றும் ராஜி தங்கமயிலை சமாதானப்படுத்தி பேசுகிறார்கள்.

அப்பொழுது ராஜி உங்களுக்கு கதிர் தான் பணம் கொடுத்து உதவி பண்ணி இருக்கிறார் என்பது தெரியாதா என கேட்கிறார். அதற்கு தங்கமயில் தெரியும் ஆனால் மாமாவின் பணத்தை எடுத்து தான் எங்களுக்கு உதவி செய்தார் என்பது எனக்கு தெரியாது என்று சொல்கிறார். இதையெல்லாம் நினைத்து பார்க்கும்போது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.

யாரிடமும் சொல்லாமல் அப்படியே போய் விடலாமா என்று தோன்றுகிறது என தங்கமயில் புலம்புகிறார். உடனே மீனா மற்றும் ராஜி இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. எது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது வாங்க சாப்பிடலாம் என தங்குகிறார்கள். இதே மாதிரி தொடர்ந்து இவர்கள் மூன்று பேரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

- Advertisement -

Trending News