சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தேசிய விருது நடிகையை பின்னுக்கு தள்ளிய அண்ணாச்சி.. இன்னும் என்னென்ன கொடுமையை பாக்கணுமோ!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் படம் ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகி இருந்தது. இப்படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் வெளியாகி யூடியூபில் ட்ரெண்ட் ஆன நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

இதனால் நேற்று காலை முதலே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் தி லெஜண்ட் படம் வெளியானது. அதிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை வேற லெவல் இருந்தது. நகைச்சுவை நடிகர் விவேக் இப்படத்தில் நடித்திருந்தது மேலும் சிறப்பம்சம்.

இந்நிலையில் தி லெஜன்ட் படத்தை பார்க்க வருபவர்கள் 100% சிரித்து மகிழலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்டுகளை தெரிக்கவிட்ட வருகின்றனர். மேலும் படத்திற்கு அண்ணாச்சி 50 கோடி செலவு செய்த நிலையில் ஆடியோ பங்ஷன் அது இது என அதில் சில கோடிகள் செலவு செய்து இருந்தார்.

இந்நிலையில் முதல் நாளில் தி லெஜண்ட் படம் உலகம் முழுவதும் 2 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக அண்ணாச்சி ஹீரோவாக கால் பதித்தாலும் பாலிவுட் குயின், தேசிய விருது நடிகை கங்கனா ரனாவத் இன் தாகத் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அதாவது தாகத் படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் 40 லிருந்து 50 லட்சம் வரைதான் வசூலை ஈட்டியது. மேலும் மொத்தமாக தாகத் படம் 3 கோடி தான் வசூல் செய்திருந்தது. பாலிவுட்டில் முன்னணி நடிகையின் படம் இவ்வாறு மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆனால் நம்ம அண்ணாச்சி முதல் நாளே 2 கோடி வசூல் செய்துள்ள நிலையில் வரும் நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் இரட்டிப்பாக அதிக வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் இணையத்தில் தி லெஜண்ட் படத்தைப்பற்றி மோசமான விமர்சனங்கள் வந்தாலும் கங்கனா ரனாவத் படத்தைவிட அண்ணாச்சி படம் அதிக வசூல் செய்துள்ளது.

என்னதான் இந்த படத்தில் இருக்கு என்று பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம். எது எப்படியோ அண்ணாச்சி கொஞ்சநாள் தூக்கத்தை தொலைத்து தான் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் தயாரிப்பில் கவனம் செலுத்தினால் இன்னும் அமோகமாக இருக்கும்.

- Advertisement -

Trending News