fbpx
Connect with us

30 கோடி பட்ஜெட்டில் மாஸாக உருவான அண்ணாச்சி படம்.. இப்ப அதுக்கு என்னாச்சி?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

30 கோடி பட்ஜெட்டில் மாஸாக உருவான அண்ணாச்சி படம்.. இப்ப அதுக்கு என்னாச்சி?

தற்போதைய சூழ்நிலையில் கையில் கேமராவை வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுத்து விடலாம் என்பதை போல, கையில் பணம் வைத்திருந்தால் யார் வேணாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்று நிலைமையும் உருவாகிவிட்டது. அதில் தமிழ் சினிமாவில் தான் இப்படி ஒரு கூத்து நடக்க இருக்கிறது என்பது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சி, சமீபகாலமாக தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதேபோல் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சுமார் ரூ.2 கோடி ரூபாய் கொடுத்த போதே தெரியும் தமிழ் சினிமாவில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று.

அது இன்று நடந்துவிட்டது. ஆமாம். அண்ணாச்சி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். இனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாரும் இவர் முன்னால் நிற்க முடியாது. முதல்படமே 30 கோடி பட்ஜெட். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், ஜேடி-ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் மற்றும் பிரபு, விவேக் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய ஈத்திகாதிவாரி அண்ணாச்சி உடன் ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் அண்ணாச்சியின் இந்த படம் மாஸ் நடிகர்களின் மிஞ்சும் அளவுக்கு மாஸ் ஆக இருக்கும் என இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கொரானா பாதிப்பால் மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விரைவில் அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியிட இருப்பதாக இரட்டை இயக்குனர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜேடி மற்றும் சரியாக இரட்டை இயக்குனர்கள் வேறு யாருமல்ல. தல அஜித் மற்றும் விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர்கள் தான்.

Continue Reading
To Top