fbpx
Connect with us

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் புதிய படம், புதிய கெட்டப்.. அல்லல்படும் சமூகவலைதளங்கள்

annachi-saravanan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் புதிய படம், புதிய கெட்டப்.. அல்லல்படும் சமூகவலைதளங்கள்

தற்போதைய சூழ்நிலையில் கையில் கேமராவை வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுத்து விடலாம் என்பதை போல, கையில் பணம் வைத்திருந்தால் யார் வேணாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்று நிலைமையும் உருவாகிவிட்டது. அதில் தமிழ் சினிமாவில் தான் இப்படி ஒரு கூத்து நடக்க இருக்கிறது என்பது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சி, சமீபகாலமாக தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதேபோல் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சுமார் ரூ.2 கோடி ரூபாய் கொடுத்த போதே தெரியும் தமிழ் சினிமாவில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று.

அது இன்று நடந்துவிட்டது. ஆமாம். அண்ணாச்சி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். இனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாரும் இவர் முன்னால் நிற்க முடியாது. முதல்படமே 30 கோடி பட்ஜெட். நயன்தாரா ஹீரோயின், ஹன்சிகா ஹீரோயின் கனவில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு நிஜத்தில் டாட்டா காட்டி விட்டு சென்று விட்டனர் இருவரும்.

தற்போது தீவிரமான நடிகை வேட்டையில் இறங்கியுள்ள படக்குழுவினர் மும்பையில் டேரா போட்டுள்ளனர். அண்ணாச்சியை வைத்து படம் எடுக்கிறார்களோ இல்லையோ அண்ணாச்சியை வைத்து நன்றாக வாழ்ந்து கொள்கிறார்கள் என்று சிலர் வயித்தெரிச்சலில் சுற்றி வருகின்றனர்.

தற்போது அர்ஜுன் ரெட்டி கெட்டப்பில் தெறிக்கவிடும் அண்ணாச்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களை வேட்டையாடி வருகிறது. இதனால் யாரும் சமூக வலைதளங்களின் பக்கமே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

annachi

annachi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top