Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-annachi-cinemapettai

Videos | வீடியோக்கள்

ரஜினி ஸ்டைலில் போஸ்டர் வெளியிட்ட அண்ணாச்சி.. இணையத்தை கலக்கும் ‘தி லெஜன்ட்’

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் அண்ணாச்சி முதலில் அவரது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனை பல இயக்குனர்களிடம் கூறியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட ஜேடி ஜெர்ரி என்ற இயக்குனர் அண்ணாச்சியிடம் படத்தின் கதையைக் கூறி சம்மதம் வாங்கி உள்ளனர். நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வந்த நிலையில் இப்படத்தில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும் எனவும் கண்டிப்பாக இப்படம் அண்ணாச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்று தரும். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது படக்குழுவினர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்த படத்தின் பெயர் ‘தி லெஜன்ட்’ எனவும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

the-legend

the-legend

இதில் காலா படத்தில் ரஜினி குடை வைத்து சண்டை போடுவது போல் அண்ணாச்சியும் குடை வைத்து சண்டை போடுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு டப் கொடுப்பார் போல என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top