saravanan_cinemapettai

பிரபள டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் தன் பார்வையால், செல்லக்குறும்பால், தன் பெரிய விழிகளால் ரசிகர்களைக் கொள்ளை கொள்பவர் ரக்‌ஷிதா.

எப்போதும் காதலும் கோபப்பார்வையுடனும் சீரியலில் வலம் வரும் ரக்‌ஷிதா அம்மன் வேடத்தில் தோன்றி மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

‘‘எவ்வளவு நாள்தான் ஒரே கேரக்டரையே டைரக்ட் பண்றது. நானெல்லாம் அம்மன் கெட்டப்ல நடிப்பேனு நினைச்சுக்கூட பார்த்ததில்ல.

ஆனா அம்மன் கெட்டப் மேல ஒரு கிரேஸ் இருந்தது. எப்படியாவது சினிமாவுலேயாவது அம்மன் கெட்டப்ல நடிச்சுரணும்ன்ற அளவுக்கு கிரேஸி கேர்ள் நான்.

அதிகம் படித்தவை:  மீண்டும் ஒரு வெக்கங்கெட்ட புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!

இவ்வளவு சீக்கிரத்துல அதுவும் நான் வேலை பர்த்துட்டு இருக்கிற சின்னத்திரையிலேயே அந்த வாய்ப்பு வரும்னு நினைச்சுக்கூட பார்க்கலை.

சீரியல்படி நாங்க சாமி கும்பிட கோவிலுக்குப் போவோம். அப்ப எனக்கு அருள் வந்து நாம் அம்மனா ஆகுற மாதிரி சீன் வரும். அம்மனா நடிக்கிறப்ப அடி மனசுல ‘எங்க நம்மளை கேலி பண்ணிருவாங்களோ’ன்னு பயம் நிறைய இருந்தது.

மனசைத் தைரியமா வைச்சுகிட்டு நடிச்சு முடிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க… இதுவரை என்னைக் குறும்பா, கோபமா பார்த்த ரசிகர்களுக்கு அம்மனா நான் நடிச்சது ரொம்பப் பிடிச்சிருக்கு.

அதிகம் படித்தவை:  கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: பெண் அனுபவித்த கொடுமைகள்..!

எனக்கு நான் நடிச்ச காட்சிகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பினாங்க. பலர் அந்தக் காட்சி வர்றப்ப என்னை கையெடுத்துக் கும்பிடுறதா சொன்னாங்க.

அதைக்கேட்டப்ப உடம்பு சிலிர்த்திடுச்சு” ‘‘அதுக்கப்பறம் இரண்டு படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது.

ஆனால், அது எதுவும் வாவ்..நைஸ்”ன்னு சொல்ற மாதிரியான கேரக்டர்கள் இல்ல.

அனேகமா என்னோட அம்மன் கெட்டப் பார்த்துட்டு சினிமா வாய்ப்புகள் நிறைய வரலாம்னு நினைக்கிறேன். எனக்கு சினிமாலயும் பட்டையைக் கிளப்பனும்னு ஆசை.

சரி அவங்க ஆசை நிறைவேறுதானு பொறுத்திருந்து பார்ப்போம்.