Connect with us

Cinemapettai

சரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது

saravanabhavan-rajagopal-died

Tamil Nadu | தமிழ் நாடு

சரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது

நன்றாக வாழ்ந்த மனிதன், நன்றாக வாழ வேண்டிய மனிதன் குருட்டுத்தனமான ஜோசியத்தை நம்பி தனது உயிரை விட்டிருக்கிறார் சரவணபவன் ராஜகோபால். நீதிமன்றத்திற்கே டிமிக்கி கொடுத்து ஒரு நாள் கூட சிறை செல்லாமல் மருத்துவமனையிலேயே வீம்புக்காக உயிரை விட்டிருக்கிறார் சரவணபவன் ராஜகோபால்.

பல கோடி பணம் இருந்து என்ன பிரயோஜனம் ஒரு பெண்ணாசையால் என் வாழ்க்கையை இழந்து உயிரை விட்டிருக்கிறார். 1980ல் ஆரம்பித்த ஆரம்பித்த இவரது சைவ உணவு ஹோட்டல்  சென்னை சரவணபவன் ஹோட்டல் மிக சிறப்பாக சென்றது.

ராஜகோபால் தன்னிடம் வேலை பார்ப்பவரின் மகள் மீது ஆசைப்பட்டு எதுவும் நடக்கலாம் என தெரிந்தும் அவர் கணவரை கொன்று, அவர் செய்த செயலால் இப்பொழுது உயிர் அவரை விட்டுச் சென்றுவிட்டது.

ஜீவ ஜோதியை திருமணம் செய்வதற்காக முயற்சித்த முயற்சிகளில் எதுவும் சரியாக அமைய வில்லை அதனால் கொலை செய்யும் அளவுக்கு சென்றார் சரவணபவன் ராஜகோபால். பின்பு ஆயுள் கைதியாக தண்டனை வாங்கி இருந்தார்.

ஆனால் சிறை மட்டும் செல்ல மாட்டேன் என  தனது வீம்புக்காக சிறை செல்லாமலேயே மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். தொழிலில் கவனம் செலுத்தியிருந்தால் உலக அளவில் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனராக இருந்திருப்பார். கடைசியில் ஜோசியம் அவரை கவிழ்த்து விட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top