fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.

News | செய்திகள்

விஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.

விஸ்வாசம்

சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில் தல அஜித். படத்தில் அஜித் மற்றும் அவரது மகளின் எமோஷனல் பகுதிகள் நண்டு சிண்டு முதல் பெரியவர்களை வரை பலரை பெரிதாக கவர்ந்தது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி குறிப்பாக பெற்றோர் குழந்தைகளின் உறவை வலுப்படுத்த செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது.

தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்ற மெஸேஜ் சொல்லும் படம்.

இந்நிலையில் சரத்குமார் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார்.  “வாழ்த்துக்கள் அஜித், இயக்குனர் சிவா, நயன்தாரா, சத்யஜோதி பிலிம்ஸ், மற்றும் அணைந்து நடிகர்கள் மற்றும் விஸ்வாசம் படக்குழுவுக்கு. அசத்தலான பொழுதுபோக்கு படம், குடும்ப உறவுகள் மற்றும் எமோஷன்களை மையப்படுத்தியதற்கு பிராவோ. ” என் பதிவிட்டுள்ளார்.

11000 லைக்ஸ், 3400 ரி- ட்வீட் என தல ரசிகர்கள் இந்த ஒற்றை டீவீட்டை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top