என்னது வடிவேலுக்கு 4 வருஷமா ரெட் கார்டு போட்டு இருக்காங்களா.? குண்டை தூக்கி போட்ட எக்ஸ் சங்க தலைவர்

சமீபத்தில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரை சந்தித்த பேட்டியின் வீடியோ வெளிவந்தது. அப்போது அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் அரசியல் ரீதியிலும் திரையுலக ரீதியிலும் பல்வேறு கேள்விகளுக்கு புன்னகையுடன் பதில்களை தந்தார்.

இப்போது நடக்கின்ற ஆட்சி பற்றி கேட்டதற்கு சிறப்பான முறையில் ஆட்சி நடைபெறுகிறது. கொரனா கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்து முன்னோக்கி செயல்படுகிறது அரசு என்றும்.

சட்டமன்ற நேரத்தை சரியாக பயன்படுத்தும் படியும் ஒருவர் புகழ் பாடி நேரத்தை விரயமாக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறி விடயம் சட்டமன்றத்திற்கு புதுமையானதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் கூறினார்.

பொன்னியின் செல்வன் உட்பட சில படங்களில் நடித்துக்கொண்டு இருப்பதாகவும் மேலும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் காலில் அடிபட்டிருப்பதாகவும் கூறினார். சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறியதாகவும் கூறினார்.

மேலும் வடிவேலு பற்றிய கேள்விக்கு வடிவேலுவை படத்தில் நடிக்க விடாமல் ரெட் கார்டு கொடுத்த விவகாரமே எனக்கு தெரியாது என்றும் அவராக தான் படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாக நினைத்தார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் நான் இப்போது நடிகர் சங்க தலைவருமல்ல அது தொடர்பான விடயங்களில் தலையிடுவதுமில்லை என்றும் நான் நடிகனாக மட்டுமே இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

sarath-kumar-cinemapettai
sarath-kumar-cinemapettai

வடிவேலுவுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே நீங்கள் சொல்லி தான் கேள்விப்படுகிறேன் என்று குறிப்பிட்டார். ஒரு வழியாக நண்பர் வடிவேலுவின் பிரச்சினைகள் முடிந்து மீண்டும் களத்தில் இறங்கும் வைகைப்புயலுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்