புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

ஜெயிலுக்கு போகும் சரத்குமார் மற்றும் ராதிகா.. நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல சார்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய ஹீரோ மார்க்கெட் குறைந்ததை உணர்ந்த சரத்குமார் முன்னணி நடிகர்களுக்கு அப்பா மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதைப்போல் ராதிகா நாயகியாக தனக்கென ஒரு சரித்திரத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர். சினிமா நாயகியாக மட்டுமில்லாமல் சீரியல் நடிகையாகவும் பல காலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து செக் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது அவர்களுக்கு ஓர் ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ரேடியன்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சரத்குமார் தற்போது சமத்துவ மக்கள் கட்சி மூலம் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த தேர்தலுக்கு கூட கமலஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இருவர் மீதும் மோசடி வழக்கு பதிந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

sarathkumar-kamal-cinemapettai
sarathkumar-radhika-cinemapettai

Trending News