Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேஜிஎஃப் புகழ் யாஷ் கெட்டப்புக்கு மாறி கெத்து காட்டும் சரத்குமார்.. தாடி வளர்த்து செம்ம மாஸான லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் 60 வயதிற்கு மேல் உள்ள நடிகர்களில் மிகவும் இளமையான தோற்றம் கொண்டவர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என அன்றைய கால ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சரத்குமார் சமீபகாலமாக ஹீரோயிசத்தை ஒதுக்கிவிட்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் தந்தை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சரத்குமார் விரைவில் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் பட தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் சமீபத்தில் சரத்குமார் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க தினமும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆனது.

sarathkumar-cinemapettai
அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் புகழ் யாஷ் கெட்டப்பில் தாடி வளர்த்து செம்ம மாஸாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.
