நடிகர், அரசியல் பிரமுகர் என பண்முகம் கொண்டவர் சரத்குமார். இவர் சில நாட்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

நடிகர் சங்க தோல்விக்கு பிறகு கொஞ்சம் தமிழ் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். இந்நிலையில் இவருக்கு திடிரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனே இவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். இச்செய்தி திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல்நிலை குறித்து தனஞ்செயன் அவர்கள் ‘மீண்டும் அவர் பழைய பலத்துடன் வருவார், மிகவும் தைரியமானவர் அவர்’ என டுவிட் செய்துள்ளார்.